இன்றைய ராசிபலன் (13.05.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4news #L4
Prasu
1 month ago
இன்றைய ராசிபலன் (13.05.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

கல்விக் கடன் மற்றும் வீட்டுக் கடன் அவைகளை சரிவரக் குறித்த நேரத்தில் கட்டிவிடுவீர்கள். பெற்றோர்கள் மீது பிள்ளைகளின் அன்பு அதிகப்படும். ஆதலால், அவர்களின் தேவையை தாங்களாகவே நிறைவேற்றி விடுவீர்கள். வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

ரிஷபம்

நண்பர்களுடன் சுற்றுலா சென்றுவிடுவீர்கள். வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு தாங்கள் விரும்பிய நாட்டிற்கு செல்ல அனுமதி கிடைக்கும். திருமண முயற்சிகள் வெற்றி தரும். பெற்றோர் தங்கள் மனநிலைக்கேற்ப ஒத்துழைப்பர். தங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பெரும் தொகை கைக்கு கிடைக்கும்.

மிதுனம்

உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுக்குண்டான வழி பிறக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தை ஈட்டுவார்கள். சகோதரர்கள் தங்களை தேடி வந்து மன்னிப்பு கேட்டுப் பின் தங்களிடம் அன்பு பாராட்டுவர். தந்தையுடன் இணக்கமுடன் இருந்தால் தங்களுக்கு நன்மை செய்வார்.

கடகம்

தடைகளெல்லாம் நீங்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வேலைக்கான அழைப்பு இப்போது வரும். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் கணிசமாக லாபம் கூடும். கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் பணம் வரும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் சிறு சிறு விபத்துகள் அல்லது காரியத் தடை ஏற்படலாம். ஆதலால், இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது.

கன்னி

இது நாள் வரை ஏமாற்றிக் கொண்டிருந்த நபர் உங்களிடம் கையும் களவுமாக சிக்கி விடுவார். விவசாயிகளுக்கு அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். பழைய நண்பர்கள் தேடி வந்து உதவி புரிவர். பெண்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளில் மகிழ்வார்கள்.

துலாம்

திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை தள்ளிப் போடுவர். தங்கள் துணைவர் தங்கள் சொல்படி நடப்பார். தங்களுடைய கருத்தில் சில உண்மை நிலைகளை அவர் உணர்வார். காதலர்கள் முதலில் பெற்றோர்களுக்கு தங்களின் கடமையை செய்து விடுவர். பணவரவுக்கு பஞ்சமில்லை.

விருச்சிகம்

வயதானவர்கள் தீர்க்கயாத்திரை மேற்கொள்வர். ஒரு சிலருக்கு கேட்ட இடத்திற்கே உத்யோக மாற்றம் கிடைக்கும். தங்க ஆபரணங்களை வாங்குவீர்கள். காதலர்கள் தங்கள் வேலை தேடும் பணியில் ஆர்வம் கொள்வது நல்லது. தேக ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உடல் நலம் சிறக்கும்.

தனுசு

எதிரிகள் தங்களிடம் சரணடைவர். நீண்ட நாள் நினைவலைகளை அசைபோடுவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு கிடைக்கும். வழக்குகள் தங்களுக்கு சாதகமாகும். எதிர்பார்த்த நபர் தங்களை தேடி வருவார். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்புத் தருவர்.

மகரம்

குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு உதவுவர். தங்கள் துணையிடம் பெண்கள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். நெருங்கிய நண்பர்கள் தங்களிடம் கொண்டிருந்த மனக்கசப்பு நீங்கி நட்பு பாராட்டுவார்கள்.

கும்பம்

பெற்றோர்கள் தங்கள் சொத்தினை சரிபாதியாக பிள்ளைகளுக்கு பிரித்து வைத்துவிடுவர். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு அதிக அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதற்குண்டான ஆர்டர்களையும் லாபத்தையும் பெறுவர். மாணவர்களுக்கு கற்பனைத் திறன் அதிகரிக்கும். ஆசிரியர்களின் பாராட்டை பெறுவர்.

மீனம்

வெளிநபருக்கு உதவி செய்து பின்பு வருந்துவதை தவிர்க்கவும். தொழிலில் அதிகமான பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் அதிகரித்து மேல் படிப்பிற்காக முயற்சி எடுப்பர். பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும். திடீர் பயணம் உற்சாகம் தரும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4