108 மில்லியன் ரூபா கொக்கைனுடன் இந்தியர் கைது: கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி!

#SriLanka #Arrest #Airport #Lanka4 #Katunayaka #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
108 மில்லியன் ரூபா கொக்கைனுடன் இந்தியர் கைது: கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 108 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை ஒருவர் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து (Addis Ababa) கத்தார் வழியாக இலங்கை வந்த 45 வயதுடைய இந்தியப் பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் பயணப் பொதியைச் சோதனையிட்ட போது, அதில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோவுக்கும் அதிக எடையுடைய கொக்கைன் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச சந்தைப் பெறுமதி சுமார் 108 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபர் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தாரா என்பது குறித்தும், இதன் பின்னணியில் உள்ள ஏனைய நபர்கள் குறித்தும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!