இன்றைய ராசிபலன் (17.05.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4news #L4
Prasu
1 hour ago
இன்றைய ராசிபலன் (17.05.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அரசியலில் நாட்டம் ஏற்படும். எதிரிகள் தங்கள் தவறை உணர்வர். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தம்பதிகள் வெளியிடங்களுக்குச் செல்வர். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். உறவினர்கள் வருகை இல்லத்தில் மகிழ்ச்சியைத் தரும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்

உத்யோகத்தில் நிம்மதி அடைவீர்கள். தொலைபேசி மூலம் நட்பு பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் கொள்வர். யோகாவில் மனம் லயிக்கும். மருத்துவர்களுக்கு பதவி உயர்வுண்டு. நண்பர்களிடையே கலகலப்பான சூழல் உருவாகும்.வெளியூர் பயணம் தடைபடும். மருத்துவர்கள் செழிப்பர்.

மிதுனம்

உத்யோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய தொழில் நுட்பத்தை கையாளுவீர்கள். பங்குச் சந்தை லாபம் தரும். உடன்பிறந்தோர் உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முற்படுவார்கள். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். வீட்டில் மகிழ்ச்சி தங்கும். உடல் நலம் சுகம்பெறும்.

கடகம்

சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பிரிந்த உறவினர் உங்களை தேடி வருவார்கள். வர வேண்டிய பணம் வசூலாகும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பர். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை பல கிளைகளை கொண்டு விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நன்மை உண்டாகும்.

சிம்மம்

சகோதர வகையில் உதவிகள் உண்டு. தேகத்தில் உற்சாகம் வெளிப்படும். நண்பர்கள் உதவுவர். பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். ஆன்மீகச் சுற்றுலா சென்றுவருவீர்கள். பணவிசயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கன்னி

பெரிய மனிதர்கள் உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு, ஆதரவு கிடைக்கும். அக்கம் பக்கத்தினர்களிடம் அளவோடு பழகுவது நல்லது. உத்யோகத்தில் நிறை குறைகள் இருக்கும். அனுசரிப்பது நல்லது. மாமனார் உடல்நலம் பாதிக்கப்படலாம். மாணவர்கள் மேற்படிப்புக்காக கடல் கடந்து செல்லும் யோகம் உள்ளது.

துலாம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

விருச்சிகம்

வியாபாரம் சீராக இருக்கும். உத்யோகம் தாங்கள் விரும்பியபடி திருப்திகரமாக செல்லும். அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். குடும்பத்தை பிரிந்து வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு மாற்றலாகி வருவார்கள்.

தனுசு

மனைவி உங்களுடைய தவறுகளை சுட்டிக் காட்டினால் கோபப்படாமல் அமைதியை கையாளவும். வாகனத்திற்கு அதிக செலவு ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்கள் உதவுவர். புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார்.

மகரம்

புதிய வருமானத்துக்கு வழி பிறக்கும். பிள்ளைககள் உரிய கவனத்துடன் இருப்பது அவசியம். புரமோஷன், டிரான்ஸ்பருக்கு வாய்ப்பு உள்ளது. உல்லாச பயணங்கள் செல்வதை தவிர்ப்பது நலம் தரும். மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு. உடல் நலத்தை பார்த்துக் கொள்வது நல்லது.

கும்பம்

வெளியூர் டிரான்ஸ்பர் கிடைக்கும். தங்கள் தோழிகளிடம் பெண்கள் மனம் விட்டு பேச நேரம் கிடைக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். பதவி உயர்வு பற்றி செய்திகள் வரும். நண்பர்களாக இருந்தாலும் பண விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம். தேகம் பளிச்சிடும்.

மீனம்

மகன் மகளுக்கு வசதியான இடத்தில் இருந்து நல்ல சம்பந்தம் கூடிவரும். குடும்ப உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வழக்கு சம்பந்தமாக சற்று விட்டுக் கொடுத்து சமாதானமாக போவது நலம் தரும். மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர் பாராட்டுவர்.தம்பதிகள் ஒற்றுமை காண்பர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!