ஸ்டாலினை வீழ்த்திய பாபு, சத்யபாமாவுக்கு ஏமாற்றம்!

#India #Tamil Nadu #M. K. Stalin #Vijay #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY
Abi
1 month ago
ஸ்டாலினை வீழ்த்திய பாபு, சத்யபாமாவுக்கு ஏமாற்றம்!

தமிழ்நாட்டின் கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைத் தோற்கடித்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகி வி.எஸ். பாபுவுக்குப் புதிய அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்க நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. இதன்போது, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 21 உறுப்பினர்களும், காங்கிரஸைச் சேர்ந்த 2 உறுப்பினர்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.

கடந்த சட்டசபை தேர்தலில் பலராலும் உற்றுநோக்கப்பட்ட கொளத்தூர் தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட வி.எஸ். பாபு, 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றிருந்தார். 

இதனால் இவருக்கு புதிய அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை நடந்த பதவியேற்பில் இவருக்கு இடமளிக்கப்படவில்லை.

இதேபோன்று, திருப்பூர் வடக்குத் தொகுதியில் போட்டியிட்டுப் பாரிய வெற்றி பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபாமாவுக்கும் புதிய அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை. 

இவர் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தனை 69,992 வாக்குகள் என்ற பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ள சூழலில், தவெக-வின் இந்த முக்கிய விஐபிக்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்காதது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4