இன்றைய ராசிபலன் (22.05.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன (வீடியோ இணைப்பு)

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4news #L4
Prasu
1 month ago
இன்றைய ராசிபலன் (22.05.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன (வீடியோ இணைப்பு)

மேஷம் 

உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவர். திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள்.இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அண்டை வீட்டார் மூலம் சில நன்மைகள் உண்டாகும். அரசியலில் செல்வாக்கு உயரும். அலைச்சல் அதிகரிக்கும். 

ரிஷபம் 

பெண்களுக்கு தங்களுக்கு பிடித்த துறையில் சேருவர். தடைகளெல்லாம் நீங்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் பணம் வரும். பணவரவு அதிகரிக்கும். புகழ் மற்றும் அதிகார பதவியில் உள்ளவர்கள் நண்பர்களாவர். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். 

மிதுனம் 

உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். பெண்களுக்கு வேலை கிடைக்கும். அலைச்சல்கள் அதிகரிக்கும். சற்று சோர்வோடும் களைப்போடும் காணப்படுவீர்கள். ஆனால், விற்பனை பிரதிநிதிகள் தாங்கள் எதிர்பார்த்த ஆர்டர்களை எடுத்து முடிப்பர். தேக ஆரோக்கியம் சிறக்கும். 

கடகம் 

ஆன்லைன் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். அக்கம் பக்கம் வீட்டார் உதவுவர். குடும்பக் கடமைகளை முடிப்பது நல்லது. சுபச் செலவுகள் அதிகமாகும். குடும்பத்தில் விவாதம் வந்துப் போகும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. இளைஞர்கள் காதலில் எச்சரிக்கையாக இருப்பது நலம். 

சிம்மம்

வழக்கு சாதகமாகும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். தியானம் மேற்கொள்வது டென்ஷனை குறைக்க உதவும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வங்கியில் தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு தொகை வைப்புநிதியாக செலுத்துவீர்கள். உற்சாகமான நாளாக அமையும்.

கன்னி 

நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஒரு பகுதிக் கடனை அடைத்து விடுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். தந்தையுடன் இணக்கமுடன் இருந்தால் தங்களுக்கு நன்மை செய்வார். காதலர்களின் அன்பு பலப்படும். தேக ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

துலாம் 

வியாபாரிகள் வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். தேகம் பொலிவு பெறும். மாணவர்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். அரசியல்வாதிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். மார்கெட்டிங் பிரிவினர் புதுப்புது ஆர்டர்கள், ஏஜென்சி எடுப்பீர்கள். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம்.

விருச்சிகம் 

குடும்பத் தலைவிகள் தங்க ஆபரணங்களை வாங்கிவிடுவர். வியாபாரத்தில் திருப்புமுனை உண்டாகும். பிடித்தவர்களின் எதிரபாராத சந்திப்பு நிகழும். மாமியார் உடல்நலத்தில் கவனம் தேவை. சுமாரான வேலையில் இருப்பவர்கள் பெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் அமருவார்கள். மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு.

தனுசு 

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. 

மகரம்

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். அவர்கள் போக்கே சென்று அவர்களை உங்கள் வழியில் வரவழையுங்கள். 

கும்பம் 

தொழிலில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பெண்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து அத்தியாசிய பொருள்களை வாங்குவர். பங்கு சந்தையில் ஈடுபட்டவர்கள் நிலவரத்தை அறிந்து நிதானமுடன் செயல்படவும். பிரபலமானவர்களால் நன்மை உண்டு. அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும். உடல் நலம் சிறக்கும். 

மீனம்

வேலை தேடுபர்களுக்கு புது உத்யோக வாய்ப்பு வரும். மளிகைக் கடை மற்றும் சில்லரை வியாபாரம் லாபம் தரும். பயணங்கள் நன்மையில் முடியும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். குல தெய்வ பிரார்த்தனையை செய்து முடிப்பீர்கள். தொழிலை விரிவுபடுத்துவதற்கான வங்கிக் கடன் உதவியும் கிட்டும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4