மக்களை கிலிக்கொள்ளவைத்துள்ள மூளைய்காய்ச்சல் தொடர்பில் வைத்தியர் விளக்கம்!

#SriLanka #School #Fever #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
மக்களை கிலிக்கொள்ளவைத்துள்ள மூளைய்காய்ச்சல் தொடர்பில் வைத்தியர் விளக்கம்!

பாடசாலை மாணவர்கள் மத்தியில் பரவிவரும் மூளைய்காய்ச்சல் தொடர்பில் வைத்தியர் பாலித கருணபெம விளக்கமளித்துள்ளார். 

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வைத்தியர் பாலித கருணபெம, இந் நோய் நிலைமை குறித்து மக்கள் அச்சம் கொள்ளத்   தேவையில்லை என அறிவித்துள்ளார். 

முதலில் தெனியாயாவில் பதிவான இந்த மூளைக்காய்ச்சல் பரவல் தற்போது பல பகுதிகளிலும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

 அதன்படி, தியதலாவாவில் 28 நோயாளிகளும், வெலிமடவில் 13 நோயாளிகளும், ரிக்கிளகஸ்கடியில் 25 நோயாளிகளும் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

 இது தொடர்பாக நோய்ப்பரவலியல் பிரிவும் மாகாண சுகாதார அதிகாரிகளும் முறையான விசாரணையையும் கண்காணிப்பையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

 அத்துடன் பாடசாலை மாணவர்களிடையே இந்த நோய் அதிகமாகப் பரவியுள்ளதாக கூறிய அவர், இதன் அறிகுறிகளாக அதிக காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தி ஆகியவை  தென்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4