நாடளாவிய ரீதியில் வலுப்பெற்றுள்ள தென்மேற்கு பருவக்காற்று : பல இடங்களில் 100மி.மீற்றர் மழை பெய்யும்!

#SriLanka #weather #Rain #report #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
நாடளாவிய ரீதியில் வலுப்பெற்றுள்ள தென்மேற்கு பருவக்காற்று : பல இடங்களில் 100மி.மீற்றர் மழை பெய்யும்!

தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக நாடளாவிய ரீதியில் நிலைபெற்று வருகின்றது.

இதனால்  மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. 

இது தொடர்பில் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும். 

அதேபோல்  அனுராதபுர மாவட்டத்தில் சிறிதளவு மழை பெய்யும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

 மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். 

 இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4