யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகம் திறந்து வைப்பு: டில்வின் சில்வா பங்கேற்பு!

#SriLanka #Jaffna #Lanka4 #Office #national #Open #NPP #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகம் திறந்து வைப்பு: டில்வின் சில்வா பங்கேற்பு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பிரதான அரசியல் அலுவலகம் இன்றைய தினம் சனிக்கிழமை (23.05.2026) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில், அரியாலை பகுதியில் அமைந்துள்ள இந்த புதிய காரியாலயத்தை, மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளரான தோழர் டில்வின் சில்வா மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் இணைந்து நாடாவை வெட்டி, நினைவுப் பலகையைத் திரைநீக்கம் செய்து திறந்து வைத்தனர்.

வட மாகாணத்தில் கட்சியின் அரசியல் பணிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன் மற்றும் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அவர்களுடன் யாழ். மாநகர சபை உறுப்பினர்களான சு.கபிலன், ச.பிரதீபன் உள்ளிட்ட யாழ். மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள், முக்கிய கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4