சீரற்ற வானிலையால் ஒருவர் உயிரிழப்பு - ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!
#SriLanka
#weather
#report
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 months ago
நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தின் திவுலபிட்டிய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.
இதற்கிடையே தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக 4 மாவட்டங்களில் 1,966 குடும்பங்களைச் சேர்ந்த 7,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 201 பேர் தற்போது 6 பாதுகாப்பான தற்காலிக தங்குமிட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் 123 வீடுகள் பகுதியளவிலும், 02 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே