226 பேருக்கு சர்வதேச சிவப்பு அறிவிப்பு வெளியீடு!

#SriLanka #Police #Notice #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Interpol
Thamilini
1 month ago
226  பேருக்கு சர்வதேச சிவப்பு அறிவிப்பு  வெளியீடு!

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் உட்பட, பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 226 நபர்களைக் கைது செய்வதற்காக சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர்களில் ஏறக்குறைய 90 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என்று கொழும்பு மாவட்ட பிரதி காவல்துறைத் தலைவர் நிஷாந்த சொய்சா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றியபோது அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், 35 சந்தேக நபர்களுக்கு சிவப்பு அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து 33 பிற குற்றவாளிகளும், ஏறக்குறைய 68 முதல் 70 சந்தேக நபர்களும் தீவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். மேலும், சுமார் 226 பேருக்கு சிவப்பு அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4