சட்டம் மௌனமாக உள்ளது - விமல் வீரவன்சவிற்கு பொலிஸார் அழைப்பு!

#SriLanka #Police #Wimal Weerawansa #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
சட்டம் மௌனமாக உள்ளது - விமல் வீரவன்சவிற்கு பொலிஸார் அழைப்பு!

பத்தரமுல்லை போர் வீரர்கள் நினைவுத்தூபிக்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய வாக்குமூலத்தை வழங்குவதற்காக பொலிஸாரால் தமக்கு அழைப்பு விடுத்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

 கொழும்பில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை தலாங்கம பொலிஸ் நிலையத்திற்குச் சென்று வாக்குமூலம் அளிக்கவுள்ளதாக அவர் கூறினார்.

 இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், "நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும் உள்ள உரிமையின் அடிப்படையில், போர் வீரர்கள் நினைவுத்தூபிக்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தச் சென்றோம்.

 அதற்குத் தடையை ஏற்படுத்தியவர்கள், இப்போது வாக்குமூலம் அளிக்க பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு எமக்கு அறிவித்துள்ளனர். 

சட்டம் அனைவருக்கும் சமமானது என்று ஜனாதிபதி கூறுகிறார். ஆனால், நீதி அமைச்சிற்குச் சொந்தமான மல்வானை மாளிகையை ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராகச் சட்டம் செயற்படவில்லை. நாம் பொது இடத்திற்கே சென்றோம். எமக்கு ஒரு விதமான சட்டமும், அந்த மாளிகையை ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராகச் சட்டம் மௌனமாகவும் இருக்கின்றது" எனத் தெரிவித்துள்ளார். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )




இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4