சைபர் ஊடுருவலால் மாயமான 2.5 மில்லியன் டொலரில் வெறும் 200 டொலர்களே மீட்கப்பட்டதாக தகவல்!
இலங்கை நிதி அமைச்சின் கணினி அமைப்பில் ஏற்பட்ட சைபர் ஊடுருவல் காரணமாக மாயமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களில் வெறும் 200 டொலர்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சைபர் மோசடியால் மாயமாகிய பணத்தை மீட்க இலங்கை அதிகாரிகள் அமெரிக்காவிடம் உதவி கோரியுள்ளனர்.
இந்த விசாரணைகளின் போது, திருடப்பட்ட நிதியின் ஒரு பகுதி அமெரிக்காவின் டெலவெயர் மாகாணத்தில் உள்ள ஒரு வங்கி கணக்கிற்கும், மீதமுள்ள நிதி மற்றொரு மாகாணத்தில் உள்ள வங்கி கணக்கிற்கும் மாற்றப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், டெலவெயர் மாகாண வங்கி கணக்கு முற்றிலும் காலியாக உள்ளதாகவும், இரண்டாவது கணக்கில் வெறும் 200 டாலர் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் இலங்கைக்குத் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய குறித்த 200 டொலரை மீட்பதற்கான நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே )