களுவாஞ்சிகுடியில் மீன்பிடிக்கச் சென்ற 19 வயது இளைஞர் மாயம்!! படகு மட்டுமே மீட்பு!
#SriLanka
#Batticaloa
#Fisherman
#Missing
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 months ago
களுவாஞ்சிகுடி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் காணாமல் போனவரின் உறவினர்களால் நேற்று (24) களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுதாவளை சிறி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
இதனையடுத்து குறித்த கடற்பகுதியில் தேடுதல் இடம்பெற்ற நிலையில், அவர் சென்ற படகு கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அந்த இளைஞரை காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே