கைது செய்யப்பட்டிருப்போம் : கூகுளை கூட அணுக முடியவில்லை - சவேந்திர சில்வா ஆதங்கம்!

#SriLanka #America #savendra silva #sanctions #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
கைது செய்யப்பட்டிருப்போம் : கூகுளை கூட அணுக முடியவில்லை - சவேந்திர சில்வா ஆதங்கம்!

இறுதிகட்ட போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமெரிக்க விதித்துள்ள தடையின் காரணமாக தான் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்று வழங்கிய பிரத்தியேக பேட்டியொன்றில் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். 

குறித்த பேட்டியில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், பொருளாதார தடை காரணமாக பணப்பரிவர்த்தனைககள் மற்றும் கூகுளை அணுகுவது உள்ளிட்ட பல பிரச்சினைகளை தாம் எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

“என்னைப் பொறுத்தவரை, எனது கடன் அட்டையைக் கொண்டு பணம் கூட செலுத்த முடியவில்லை.இதுதான் உண்மையான யதார்த்தம். என்னுடன் தொடர்புடைய சர்வதேச வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டில் உள்ள எனது சகோதரர் மற்றும் மைத்துனியின் கணக்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

 கடைசி நாளில் போரை முடிவுக்குக் கொண்டு வந்த இரண்டு படைப்பிரிவுகளில் ஒன்றிற்கு நான் தலைமை தாங்கினேன். போரின் இறுதிக்கட்டத்தில் 53, 55, 57 மற்றும் 58-வது டிவிசன்களில் பணியாற்றிய படையினர், தகுதிச் சரிபார்ப்பு நடைமுறைகளின் பின்னர் ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்கள் அந்தப் படைப்பிரிவில் சிறிதளவு காலம் இருந்ததாலேயே, அமைதி காக்கும் நடவடிக்கைகளிலிருந்து அவர்களை நீக்குவதற்கு காரணமாக இருந்தது.

 எனது இரண்டு மகள்கள் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். ஆனால் அவர்களைச் சந்திக்க வெளிநாடு செல்லும் வசதி எங்களுக்கு இல்லை. அவர்கள் எங்களைப் பார்க்க இங்கு வர வேண்டும். தெற்காசியாவில் சில நாடுகளில் மட்டுமே என்னால் பாதுகாப்பாகப் பயணிக்க முடியும். மற்ற இடங்களில், நாங்கள் நிச்சயமாகக் கைது செய்யப்பட்டிருப்போம்” எனத் தெரிவித்துள்ளார். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!