தாஜ்மஹாலைச் சுற்றிப்பார்த்து வியந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ.!!
#America
#world_news
#ImportantNews
#Visit
#Secretary
#L4
Abi
2 hours ago
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ (Marco Rubio), தனது மனைவி ஜீனெட் டி ரூபியோவுடன் (Jeanette Dousdebes Rubio) ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலை பார்வையிட்டார். காதலின் சின்னமாகவும், உலக அதிசயங்களில் ஒன்றாகவும் போற்றப்படும் தாஜ்மஹாலின் பிரம்மாண்டமான கட்டிடக்கலை மற்றும் அதன் அழகைக் கண்டு அவர்கள் இருவரும் வியந்து பாராட்டியுள்ளனர்.

வெள்ளை நிற பளிங்குக்கல்லால் ஆன தாஜ்மஹாலின் அழகை இரசித்த மார்கோ ரூபியோ தம்பதியினர், அதன் முன்பாக நின்று நினைவாகப் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.
இவர்களின் இந்த தாஜ்மஹால் விஜயம் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
(வீடியோ இங்கே )