வெசாக் வாரத்தை முன்னிட்டு 3 நாட்களுக்கு மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனைக்கு முற்றாகத் தடை!
#SriLanka
#Lanka4
#liquor
#Ban
#vesak
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 hours ago
தேசிய வெசாக் வாரம்” அனுசரிக்கப்படுவதையொட்டி, இலங்கையில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகள், மதுபானக் கடைகள் மற்றும் சூதாட்ட விடுதிகள் மே 30, 31 மற்றும் ஜூன் 1 ஆகிய மூன்று நாட்களிலும் மூடப்பட்டிருக்கும் என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
பௌத்த மத நிகழ்வுகளுக்கான மரியாதையையும் ஆன்மீக சூழலையும் பேணும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த காலப்பகுதியில் நாடு முழுவதும் வெசாக் கொண்டாட்டங்கள், தர்ம நிகழ்வுகள் மற்றும் மத சார்ந்த பணிகள் நடைபெறவுள்ள நிலையில், பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் வெசாக் காலத்தில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் நிலையில், இம்முறையும் அதே நடைமுறை தொடரப்படுகின்றது.
(வீடியோ இங்கே )