லாவோசில் குகையில் சிக்கியிருந்த 05 பேர் பாதுகாப்பாக மீட்பு!
#SriLanka
#Rescue
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 months ago
மத்திய லாவோசின் சைசோம்பூன் மாகாணத்தில் உள்ள குகையொன்றில் சிக்கியிருந்த 05 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 19 ஆம் திகதி குறித்த குகைக்குள் 07 பேர் நுழைந்த நிலையில், கனமழை மற்றும் வெள்ளம் குகையின் வாயிற் பகுதியை மூடியது.
இதனால் ஏழுபேரும் அங்கு சிக்கிக்கொண்டனர். கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக அவர்கள் அங்கு சிக்கியிருந்தனர். இதனைத் தொடர்ந்து லாவோ மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் அவர்களை மீட்கும் பணியை முன்னெடுத்திருந்தனர்.
05 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள அதேநேரம் மேலும் இருவர் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி தொடர்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே