சுகாதார பாவனைப் பொருட்களுக்கு வரியை நீக்க வேண்டும்!! அரசியலமைப்பில் மாற்றத்தை கொண்டுவர முனைப்பு!

#SriLanka #Sajith Premadasa #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
சுகாதார பாவனைப் பொருட்களுக்கு வரியை நீக்க வேண்டும்!! அரசியலமைப்பில் மாற்றத்தை கொண்டுவர முனைப்பு!

சுகாதார சாதனங்கள் மீதான வரிகளை நீக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். 

பெண்களின் மாதவிடாய் சுகாதார நலன் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தும் நோக்கில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்,இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,   இந்தியாவிலும், பங்களாதேஷிலும் ஆரோக்கிய துவாய் உள்ளிட்ட சுகாதார பாவனைப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதில்லை. கென்யா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரித்தானியா கூட வரிகளை நீக்கியுள்ளன. ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் இவற்றை இலவசமாக வழங்க முடிவெடுத்துள்ளது. 

 முன்னாள் நியூஸிலாந்து பிரதமர் கூட பாடசாலை மட்டத்தில் இத்தகைய வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார். உலகின் ஏனைய நாடுகள் இந்த பாவனைப் பொருட்களுக்கான வரிகளை நீக்கியுள்ளன.  ஆகவே நாமும் நமது நாட்டு பாடசாலை பிள்ளைகள், பெண் தொடர்பாக சிந்தித்து இந்த வரிகளை நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

 நமது நாட்டின் அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகளில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கு மேலதிகமாக பொருளாதார, சமூக, சுகாதார மற்றும் கல்வி உரிமைகளை சேர்த்துக் கொள்ளப்படாத நிலை காணப்படுகின்றன. 

 இவை மனித உரிமைகளாக மாறும்போது   நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வுகளை காண முடியும். 

   நாட்டின் மக்கள்தொகையில் 52% பெண்களாகவே காணப்படுகின்றனர்.  மாதவிடாய் வறுமை பற்றி பேசும்போது இங்கு பல கோணங்கள் காணப்படுகின்றன.இது குறித்து பேச தயக்கம் காட்டும் மற்றும் கலாச்சார ரீதியாக பொருத்தமற்றது என்ற கருத்துக்களும் எம்மத்தியில் காணப்பட்டாலும், இவற்றிலிருந்து விடுபட்டு நாமனைவரும் முற்போக்காக நடந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )





உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!