எரிபொருள் ஒதுக்கீடு : QR குறியீட்டு முறையை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை!
#SriLanka
#Fuel
#QRcode
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
6 hours ago
தற்போது நடைமுறையில் உள்ள கியூஆர் குறியீடு அடிப்படையிலான எரிபொருள் ஒதுக்கீட்டு முறை எதிர்காலத்தில் கடுமையாக அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
ஊடவியலாளர்களிடம் இன்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் எரிபொருள் நுகர்வை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஒழுங்குபடுத்துவதும் கட்டுப்படுத்துவதுமே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த அணுகுமுறை பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கத்தை ஓரளவிற்குத் தணிக்க உதவும் என்றும் அவர் மேலும் கூறினார்.
(வீடியோ இங்கே )