பிக்குகள் தொடர்பான விசாரணைக்கு சங்க நீதிமன்றம் அவசியம் - கலகொட அத்தே ஞானசார தேரர்!!

#SriLanka #Gnanasara Thero #Court #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 hours ago
பிக்குகள் தொடர்பான விசாரணைக்கு சங்க நீதிமன்றம் அவசியம் - கலகொட அத்தே ஞானசார தேரர்!!

பௌத்த பிக்குகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கும், சமூகத்தை அமைதிப்படுத்துவதற்கும் சங்க நீதிமன்றம் போன்ற ஒரு பொறிமுறை இன்றியமையாதது. 'சங்க நீதிமன்றம்' அமைப்பது குறித்து கவனம் செலுத்துகிறேன் என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

 வழக்கொன்றிற்காக நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகியப்பின் செய்தியாளர்களுக்கு கருத்து வெளியி்ட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

 இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  நீண்டகாலமாக விவாதிக்கப்படும் 'சங்க நீதிமன்றம்' அமைப்பது தொடர்பான விடயம் குறித்து நான் கவனம் செலுத்துகிறேன். 

ஏனைய மத சமூகங்களில் இவ்வாறான உள்நாட்டு நீதிமுறைகள் காணப்படுகின்றன. 1956 ஆம் ஆண்டின் பௌத்த சாசன ஆணைக்குழுவின் அறிக்கையிலும் இது தொடர்பாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 சங்க நீதிமன்றம் என்பது சாதாரண நீதிமன்றம் போன்ற ஒன்றல்ல் இது பிக்குகளின் நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணை செய்து, தவறு செய்தவர்கள் யார், செய்யாதவர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் ஒரு முறையான பொறிமுறையாகவே இருக்க வேண்டும்” என்றார். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!