மியான்மரில் உள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 46 பேர் மரணம்

#Death #people #Lanka4 #Blast #Myanmar #L4
Prasu
2 hours ago
மியான்மரில் உள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 46 பேர் மரணம்

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மியான்மர் பிராந்தியத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக மீட்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

சீன எல்லைக்கு அருகிலுள்ள, ஷான் மாநிலத்தில் உள்ள நம்காம் டவுன்ஷிப்பில் இருக்கும் காங் டாட் என்ற கிராமத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இறந்தவர்களில் ஒரு வயதுக் குழந்தை உட்பட ஆறு சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிவிபத்தில் காங் டாட்டில் சுமார் 200 வீடுகளும், அருகிலுள்ள பான் லோன் கிராமத்தில் மேலும் 100 வீடுகளும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இப்பகுதியைக் கட்டுப்படுத்தி, இராணுவ ஆட்சிக்குழுவுடன் சண்டையிட்டு வரும் டாங் தேசிய விடுதலை இராணுவம் (TNLA), உள்ளூர் சுரங்கப் பணிகளுக்காக ஒரு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் தீப்பிடித்ததால் இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாகக் கூறியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!