ஜீவ ஒளி விளையாட்டுக் கழகத்தின் 58வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்!

#SriLanka #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 hours ago
ஜீவ ஒளி விளையாட்டுக் கழகத்தின் 58வது ஆண்டு நிறைவு விழா  கொண்டாட்டம்!

மட்டக்களப்பு, நாவற்குடா பிரதேசத்தில் பல தசாப்தங்களாக இயங்கி வரும் ஜீவ ஒளி விளையாட்டுக் கழகம், இப்பகுதி இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் விளையாட்டுத் திறன்களை ஊக்குவிப்பதிலும், சமூக ஒற்றுமையை வளர்ப்பதிலும் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. 

இதன் 58வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இம்முறை கிராமிய விளையாட்டு விழா மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கழகத்தின் நிறுவுனர் திரு. சி. சிவரத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாநகர முதல்வர், பிரதி முதல்வர் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், விளையாட்டுத்துறை அதிகாரிகள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கௌரவ அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.

நவீன விளையாட்டுக்களுக்கு மத்தியில், எமது பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலான வழுக்கு மரம் ஏறுதல், முட்டி உடைத்தல், கயிறு இழுத்தல், சாக்கோட்டம், கிடுகு பின்னுதல் மற்றும் சிறுவர்களுக்கான வினோத விளையாட்டுக்கள் எனப் பலதரப்பட்ட கிராமியப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாநகர முதல்வர் மற்றும் பிரமுகர்கள், "கிராமிய விளையாட்டுக்களை ஊக்குவிப்பதன் மூலம் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஆரோக்கியமான சமூகத்தையும், ஒழுக்கமான, கட்டுக்கோப்பான இளைய தலைமுறையையும் உருவாக்க முடியும்" என ஜீவ ஒளி கழகத்தின் சேவையைப் பாராட்டி உரையாற்றினர்.

தொடர்ச்சியாக 58 வருடங்கள் நாவற்குடா மண்ணில் விளையாட்டுத் துறையை வளர்த்து வரும் இக்கழகம், எதிர்காலத்தில் இப்பகுதி இளைஞர்களை தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளுக்குத் தயார்படுத்துவதையும், சமூக நற்பணிகளைத் தொடர்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அதன் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!