டெல்லியில் ஹோட்டலில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கி 21 பேர் மரணம்
டெல்லியின் மால்வியா நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில், வெளிநாட்டினர் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 40க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஐந்து மாடிக் கட்டிடத்தின் அடித்தளத்தில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் ஃப்ளோரிஷ் ஸ்டே ஹோட்டலின் உணவகத்தில்தீ விபத்து ஏற்பட்டது.
பின்னர், தீ அருகிலுள்ள மற்றொரு ஹோட்டலான மிகாசா இன்னுக்கும் பரவியது. இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீப்பிடித்து எரிந்த கட்டிடத்திலிருந்து சிலர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மாடியில் இருந்து குதித்துள்ளனர்.
மருத்துவ சிகிச்சைக்காகத் தேசியத் தலைநகருக்கு வந்திருந்த வெளிநாட்டினர் உட்பட 40க்கும் மேற்பட்ட விருந்தினர்களுக்கு அது இடமளித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
---------------------------------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )