யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கான இந்திய அரசின் புலமைப்பரிசில் திட்டம்!

#SriLanka #Jaffna #Lanka4 #University #Indian #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
8 hours ago
யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கான இந்திய அரசின் புலமைப்பரிசில் திட்டம்!

யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அம்மாணவர்களுக்கான நிதியுதவிகளை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.

முன்னதாக 2023-24 ஆம் கல்வி ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் 100 மாணவர்களுக்கு மாதாந்தம் 5,000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. இதன் வெற்றியைத் தொடர்ந்து, 2024 டிசம்பரில் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் இந்த நிதியுதவித் தொகை 7,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு திட்டம் விரிவாக்கப்பட்டது.

நடப்பு (2025-26) கல்வியாண்டில் அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த தகுதியான 100 முதலாம் வருட மாணவர்கள் இதற்கென தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களது பட்டப்படிப்பு முடியும் வரை இந்த மாதாந்த நிதியுதவி தொடரும். 

ஒவ்வொரு வருடமும் புதிய தொகுதியினர் இணைக்கப்பட்டு, 4ஆம் ஆண்டில் மொத்தம் 400 மாணவர்கள் இதன் மூலம் பயனடைவர்.

இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக பதில் துணைவேந்தரும் கலைப்பீட பீடாதிபதியுமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

♻️வீட்டுக்கடன் (HYPOTHEK) 

 ♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN) 

♻️வீடு வாங்க, (HAUSKAUFEN) 

♻️வீடு கட்ட, (HAUSBAUEN) 

♻️வீடு திருத்த. (RENOVATION) 

SHELVA SWISS 

 IMMO 

 041 790 64 64 

 079 514 64 28

 #SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!