டென்மார்க்கில் தமிழர்கள் அதிருப்தி; மண்டப வாசலில் குவிந்த பின்னணி!
Ikast Nordre Skole மண்டபத்தில் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்வுக்கான அனுமதியை, ஒரு பிரிவினர் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி ரத்து செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே, ஞாயிறு காலை 09:00 மணியளவில், நிகழ்ச்சிHerning CHOLAR பகுதிக்கு மாற்றப்படுவதாக நிர்வாகம் அவசர அவசரமாக அறிவித்தது. இதனையறியாது Ikast மண்டப வாசலுக்கு வந்த பெருமளவிலான தமிழ் மக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள், ஏமாற்றத்துடனும் கவலை தோய்ந்த முகங்களுடனும் நீண்டநேரம் காத்திருந்து கலைந்து சென்றுள்ளனர்.
மே 23 சனிக்கிழமை Randers நகரில் TCC நடத்திய அதிகாரப்பூர்வ கூட்டத்தை முக்கிய பொறுப்பாளர்களான கலைதாசன் தியாகராஜா மற்றும் கிரிதராதேவி பாலராசா ஆகியோர் திட்டமிட்டுப் புறக்கணித்துள்ளனர்.
மாறாக, Fredericia நகரில் நடைபெற்ற எனும் மாற்று நிகழ்வில் அவர்கள் கலந்துகொண்டனர். ஆனால், அதற்கு அடுத்த வாரமே (ஞாயிற்றுக்கிழமை) அவர்கள் மீண்டும் TCC நிகழ்வில் மேடையேறியது, தங்களது அதிகார பலத்தை நிரூபிப்பதற்கான ஒரு தந்திரோபாய நகர்வே தவிர ஒற்றுமைக்கானது அல்ல என உள்ளூர் தமிழர்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.
அனைத்துலகத் தொடர்பகத்தின் (TCC) முக்கிய முகமான சபாபதி மகேஸ்வரன் பொன்னம்பலம் மட்டும் தனியாக நின்று 'தமிழ் சல்யூட்' (Tamil Salute) அடித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கூட்டுத் தலைமை இல்லாத சூழலில், அவர் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்த முயல்வதையே இந்தப் புகைப்படம் காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
டென்மார்க்கில் உள்ள தமிழ் மொழிப் பாடசாலைகளின் தலைமை நிர்வாகியான அருளானந்தராஜா தில்லைநடராசா மற்றும் அவரது விசுவாசிகள் மிகச் சிலரே இந்த Herning கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
பல பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பிராந்தியக் குழுக்களுக்கு இந்த நிகழ்வு குறித்துத் தகவலே தெரிவிக்கப்படவில்லை என்றும், வேண்டுமென்றே அவர்கள் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அனைத்துலகத் தொடர்பகத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு, டென்மார்க் பணிமனை தனித்து இயங்க முற்படுவதே இந்த ஒட்டுமொத்தப் பிளவிற்கும் காரணம் எனக் கூறப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )