மருந்துகளின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் பரிசீலனை!

#SriLanka #prices #drugs #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
மருந்துகளின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் பரிசீலனை!

மருந்துகளின் விலைகளை அதிகரிப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதைத் தொடர்ந்து, இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது. 

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள  தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை (NMRA) தலைவர், விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம,  இதற்குத் தேவையான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக   குறிப்பிட்டுள்ளார். 

 இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளின் விலைகளை அதிகரிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. 

 இதேவேளை அரசாங்க வர்த்தமானி மூலம் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 60 மருந்து வகைகளின் விலைகளையும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம மேலும் தெரிவித்தார். 

 இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் தலைவர், "டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதால் அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரிப்பதை நாம் அறிவோம்.

 அதற்கமைய, மருந்துகளின் விலைகளும் அதிகரிக்கக்கூடும். இது குறித்து ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நமது நாட்டில் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளே பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து மருந்துகளின் விலைகளும் அதிகரிக்காது, ஆனால் சில குறிப்பிட்ட மருந்துகளின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படும்." என்றார். 

---------------------------------------------------------------------------------

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

♻️வீட்டுக்கடன் (HYPOTHEK) 

 ♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN) 

♻️வீடு வாங்க, (HAUSKAUFEN) 

♻️வீடு கட்ட, (HAUSBAUEN) 

♻️வீடு திருத்த. (RENOVATION) 

SHELVA SWISS 

 IMMO 

 041 790 64 64 

 079 514 64 28

 #SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!