பேருந்து கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் மற்றொரு சுற்று கலந்துரையாடல்!

#SriLanka #Bus #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
பேருந்து கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் மற்றொரு சுற்று கலந்துரையாடல்!

டீசல்விலை அதிகரிப்பிற்கு ஏற்ப பேருந்து கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் இன்று மற்றொரு சுற்று கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. 

ஒரு மாத காலத்திற்குள் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 25 ரூபாயினால் அதிகரித்துள்ளதால், தமது போக்குவரத்துத் தொழிலை முன்னோக்கி கொண்டு செல்வது மிகவும் கடினமான காரியமாக மாறியுள்ளதாகத் தனியார் பேருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன

தற்போதைய சூழ்நிலைக்கு அமைய பேருந்து கட்டணங்களை 05 சதவீதத்தால் அதிகரிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்நிலையில் இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த  ஏற்பாடு செய்து தருவதாக அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் பேருந்து சங்கங்களின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை முடிந்தவுடன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, "அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படும் போது அவர் இந்த விடயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். 

அதை விடுத்து வெளியில் வந்து தமக்குத் தெரியாதவற்றைப் பேசுவதில் அர்த்தமில்லை. நாளை எங்களுக்குக் கலந்துரையாடல் ஒன்று வழங்கப்படுமா என்று பார்க்கிறோம். இந்த நிலைமை சரி செய்யப்பட வேண்டும். நாளை அமைச்சருடன் பேசி இதில் ஒரு தீர்க்கமான முடிவை எடுப்போம். அப்படி இல்லையெனில், அடுத்த வாரம் நாங்கள் தேவையான தீர்மானங்களை மேற்கொள்வோம்." என்றார். 


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

♻️வீட்டுக்கடன் (HYPOTHEK) 

 ♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN) 

♻️வீடு வாங்க, (HAUSKAUFEN) 

♻️வீடு கட்ட, (HAUSBAUEN) 

♻️வீடு திருத்த. (RENOVATION) 

SHELVA SWISS 

 IMMO 

 041 790 64 64 

 079 514 64 28

 #SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN

லங்கா4 (Lanka4)


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!