நாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழை - மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு!
#SriLanka
#weather
#Rain
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
18 hours ago
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
இதன்காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மி.மீ கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது, தற்காலிகமாக குறிப்பிட்ட பகுதிகளில் வீசும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை

(வீடியோ இங்கே )