செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து புதிதாக 06 எலும்புக்கூடுகள் அடையாளம்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#Chemmani Mass Grave
Thamilini
4 hours ago
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 302 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் 18 ஆவது நாளாக இன்றும் (7) முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் 06 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.
அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட இரண்டு சிறுவர்களின் எலும்பு கூட்டு தொகுதி உட்பட 08 எலும்பு கூட்டு தொகுதிகள் முழுவதுமான அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
