சுரேஷ் சலே தேசிய வைத்தியசாலையில் அனுமதி: கண் தானம் செய்ய சட்டத்தரணிகளுக்கு அழைப்பு!

#SriLanka #Hospital #Lanka4 #Lawyer #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
சுரேஷ் சலே தேசிய வைத்தியசாலையில் அனுமதி: கண் தானம் செய்ய சட்டத்தரணிகளுக்கு அழைப்பு!

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, நேற்று இரவு கொழும்பு தேசிய வைத்திய சாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குற்றப் புலனாய்வுத் திணைக் களத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தனக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவர் நேற்றுமுன்தினம் முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார் என்று தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உணவு, நீர் மற்றும் மருந்துகளை உட்கொள்ள மறுத்த நிலையில், அவரது உடல்நிலை மிக மோசமடைந்ததை அடுத்தே அவர் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கண்_தானம்_இறுதி_உயில் இதேவேளை, தமது மரணம் நெருங்கி விட்டதாக உணர்வதால், கண்களைத் தானம் செய்வதற்கும், இறுதி உயில் சாசனத்தைத் தயாரிப்பதற்கும் தேவையான ஆவணங்களுடன் உடனடியாகத் தன்னை வந்து சந்திக்குமாறு சுரேஷ் சலே தனது சட்டத்தரணிகளுக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அத்துடன், தமக்கு ஏதேனும் நேர்ந்தாலும் சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறும் பொலிஸ்மா அதிபருக்கு மனைவியின் கடிதம் சுரேஷ் சலே மீது தடுப்புக் காவலில் சித்திரவதை, கொடூரமான நடத்தைகள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மருத்துவ சேவை மறுப்பு போன்ற அநீதிகள் இழைக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, அவரது மனைவி பொலிஸ்மா அதிபருக்கு நேற்று அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார். 

கடந்த ஜூன் 6 ஆம் திகதி சிறை யில் நடந்த சந்திப்பின்போது தனது கணவர் பகிர்ந்துகொண்ட 10 முக்கிய விடயங்களை உள்ளடக்கி, இது குறித்து சுயாதீன குற்றவியல் விசாரணை நடத்துமாறு அவர் கோரியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

images/content-image/1780706831.jpg


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4