“உணவோ நீரோ உட்கொள்ளவில்லை” - சுரேஷ் சலேவின் மனைவி உருக்கம்!

#SriLanka #Hospital #Food #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Suresh Sallay
Thamilini
2 hours ago
“உணவோ நீரோ உட்கொள்ளவில்லை” - சுரேஷ் சலேவின் மனைவி உருக்கம்!

 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள  அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே  உணவோ நீரோ உட்கொள்ளவில்லை என்றும் அவரது மனைவி மனோரி சலே தெரிவித்துள்ளார். 

 சுரேஷ் சலேவை மருத்துவமனையில் பார்வையிட்டப்பின் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  தனது கணவர் உணவோ நீரோ உட்கொள்ளவில்லை என்றும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறினார். 

 மருத்துவர்கள் அவரை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக கூறிய அவர், சலேவிற்கு சேலன்  செலுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். 

“அவர் இன்னும் எதையும் உண்ணவோ பருகவோ இல்லை. அவர் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். மருத்துவர்கள் அவரைக் கண்காணித்து வருகின்றனர். அவருக்கு சலைன் செலுத்தப்படுகிறது. அவர் தனது உண்ணாவிரதத்தை இன்னும் முடிக்கவில்லை,”  எனத் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4