ஊழல் வழக்கில் சரண குணவர்தன குற்றவாளி: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

#SriLanka #Lanka4 #corruption #Case #HighCourt #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 hours ago
ஊழல் வழக்கில் சரண குணவர்தன குற்றவாளி: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

கடந்த 2006ஆம் ஆண்டு சரண குணவர்தன தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் (DLB) தலைவராகப் பணியாற்றிய காலத்தில், நிறுவனத்திற்காக வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டதில் முறைகேடு செய்து, அரசாங்கத்திற்குப் பெருமளவு நஷ்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. நீண்ட விசாரணைக்குப் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் (Mohamed Mihal) பிரதிவாதி குற்றவாளி என இன்று உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றத்தினால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவருக்கான தண்டனை விபரங்களை (Sentencing) நீதிபதி அறிவிக்கவுள்ளார். 

இதற்கமைய, பிரதிவாதி தரப்புச் சட்டத்தரணிகள் தண்டனைக் குறைப்பு அல்லது அது தொடர்பான சட்டக் காரணிகளை நீதிமன்றத்தில் முன்வைக்கும் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

சரண குணவர்தன லொத்தர் சபைத் தலைவராக இருந்த காலத்தில் இடம்பெற்ற வாகன முறைகேடுகள் தொடர்பாக ஏற்கனவே சில சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது:

லொத்தர் சபைக்குச் சொந்தமான வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய மற்றொரு வழக்கில், இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது மேல் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ள இந்த 4 வழக்குகளுக்கான இறுதித் தண்டனை விபரங்கள் சட்டத்தரணிகளின் சமர்ப்பிப்புகளுக்குப் பின்னர் நீதிபதியால் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4