டெல்லியில் குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்!
#India
#Meeting
#Delhi
#Tamil
#President
#Vijay
#ChiefMinister
Lakhi
1 hour ago
டெல்லிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்த உயர்மட்டச் சந்திப்பு இன்று இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது, தமிழ்நாட்டின் முக்கிய நிர்வாகக் கட்டமைப்பு, மாநிலத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர், இரண்டாவது முறையாக டெல்லிக்கு வருகை தந்துள்ள முதலமைச்சர் விஜய், குடியரசுத் தலைவரைச் சந்தித்து வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டதோடு மலர்க்கொத்து வழங்கி கௌரவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே