சுரேஷ் சலேவின் மனநிலையை பரிசோதனை செய்ய விசேட வைத்தியக் குழு நியமனம்!

#SriLanka #Court Order #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Suresh Sallay
Thamilini
2 hours ago
சுரேஷ் சலேவின் மனநிலையை பரிசோதனை செய்ய விசேட வைத்தியக் குழு நியமனம்!

சுரேஷ் சலே, காவலில் உள்ளபோது ஏதேனும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டாரா  என்பதைக் கண்டறிய 05 பேர் கொண்ட   விசேட மனநல தடயவியல் வைத்தியக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

சுரேஷ் சலே, காவலில் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக அவரது தரப்பு சட்டத்தரணிகள் மற்றும் குடும்பத்தினர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேனவினால் இந்த விசேட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வைத்தியப் பரிசோதனைகளை தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்குமாறும் நீதவான் பணித்துள்ளார். 

 மேற்படி வைத்தியக் குழுவினால் தயாரிக்கப்படும் உத்தியோகபூர்வ மருத்துவ அறிக்கையை இவ்வழக்கின் அடுத்த தவணையின்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவான்  உத்தரவிட்டுள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4