கெப் ரக வாகனம் விபத்து : மலையகம் செய்யும் சாரதிகளுக்கு எச்சரிக்கை!
#SriLanka
#Accident
#Warning
#Driver
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
கொழும்பில் இருந்து அக்கரப்பத்தனை நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த வாகனம் ஹட்டன் – போடைஸ் – டயகம வீதியில் கட்டுப்பாட்டை இழந்து, நடுவீதியில் சுழன்று விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், குறித்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் பயணிக்கும் சாரதிகள், வேகக் கட்டுப்பாட்டுடன் முகப்பு விளக்குகளைப் பயன்படுத்திப் பாதுகாப்பாக வாகனங்களைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே