இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது: ஜனாதிபதியுடன் சைனா ஹார்பர் தலைவர் சந்திப்பு!

#SriLanka #China #Lanka4 #President #AnuraKumaraDissanayake #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
8 hours ago
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது: ஜனாதிபதியுடன் சைனா ஹார்பர் தலைவர் சந்திப்பு!

சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் (China Harbour Engineering Company - CHEC) தலைவர் BAI YINZHAN உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பில் இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டுள்ளார் 

தற்போது இலங்கையில் முதலீடு செய்வதற்கு வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகள் (FDI) இன்றியமையாத காரணியாகும் என்றும், சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டியுள்ள இணக்கப்பாடுகளின் அடிப்படையில் அரசாங்கம் கொள்கை ரீதியான ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளது

என்றும், அந்த ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு சாதகமான திசையில் செயற்படுவதாகவும் இங்கு குறிப்பிட்டுள்ளார் நாட்டிற்கு நன்மை பயக்கும் முதலீடுகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய ஆகக்கூடிய ஒத்துழைப்பை தொடர்ச்சியாக வழங்குவதாகவும்

குறிப்பாக கொழும்பு துறைமுக நகர் வலயத்தை அபிவிருத்தி அடைந்த பொருளாதார வலயமாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் குறிப்பிட்டதுடன், 

அந்த செயற்பாடுகளின்போதும் கடந்த டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் சைனா ஹார்பர் நிறுவனம் வழங்கிய சிறப்பான ஆதரவை பாராட்டியதுடன் அதற்காக நன்றியைத் தெரிவித்துள்ளார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4