முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கத்துக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை வெற்றி!
#SriLanka
#M K Sivajilingam
#Lanka4
#kidney
#Surgery
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 hours ago
மூத்த தமிழ்த்தேசிய அரசியல்வாதியும், தமிழ்த்தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும், தற்போதைய வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு சிறுநீரக மாற்றுச் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
கடந்த 11 ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இந்த அறுவை சிகிச்சை முன்னெடுக்கப்பட்டதாக தமிழ்த்தேசியக் கட்சியினர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள போதிலும், அவர் தற்போதும் வைத்தியர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும், அவருக்கான மருத்துவ சிகிச்சைகள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருவதாகவும் அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் விரைவில் பூரண குணமடைந்து திரும்புவார் என ஆதரவாளர்களும் அரசியல் பிரமுகர்களும் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே