நீதியமைச்சர் உள்ளிட்ட குழுவினர் செம்மணி மனித புதைக்குழி பகுதிக்கு களவிஜயம் செய்யவுள்ளதாக தகவல்!
#SriLanka
#Jaffna
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#Chemmani Mass Grave
Thamilini
2 months ago
செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழுவொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை அப்பகுதிக்கு களவிஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விசேட குழுவினர் அகழ்வாய்வுத் தளத்திற்கு விஜயம் செய்வதற்கான அனுமதியைக் கோரி, நேற்றைய தினம் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் (Motion) ஒன்றை தாக்கல் செசய்துள்ளனர்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன், "தாக்கல் செய்யப்பட்டுள்ள நகர்த்தல் பத்திரத்தின் அடிப்படையில், இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதன்போது நீதி அமைச்சரின் குழுவிற்கான அனுமதி குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை நீதிமன்றம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று குறிப்பிட்டார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே