குஜராத்தில் பேருந்து மற்றும் லாரி மோதி விபத்து - 6 பேர் மரணம்
#India
#Death
#Accident
#Lanka4
#Gujarat
#L4
Prasu
12 hours ago
குஜராத்தின் சூரத் நகரில் இருந்து ராஜஸ்தான் நோக்கி சென்ற சொகுசு பஸ் ஒன்று வதோதரா மாவட்டத்தில் வதோதரா-ஹலோல் நெடுஞ்சாலையில் லாரி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீதி மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பேர் காயம் அடைந்தனர்.
சம்பவம் பற்றி அறிந்து ஜரோத் காவல் நிலைய போலீசார் உடனடியாக சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
தேசிய பேரிடர் பொறுப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே