நோயாளர் எண்ணிக்கை அதிகரித்தால் வைத்தியசாலைகள் திணறும்: நெருக்கடி நிலை குறித்து எச்சரிக்கை!

#SriLanka #Hospital #Lanka4 #Patients #ADDA #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
நோயாளர் எண்ணிக்கை அதிகரித்தால் வைத்தியசாலைகள் திணறும்: நெருக்கடி நிலை குறித்து எச்சரிக்கை!

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால், வைத்தியசாலைகளால் சமாளிப்பது கடினமாக இருக்கும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜெயதித்த தெரிவித்துள்ளார்.

டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் மக்கள் மற்றும் நிறுவனங்களின் பொறுப்பு மிகவும் முக்கியமானது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

வீடுகள், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பிற இடங்களைத் தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு நுளம்புகள் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்றும், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது சுகாதார அமைப்பின் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பேருவளை பிராந்திய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் பேசிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ, "நீண்ட காலத்திற்கு நாம் என்ன செய்தாலும், டெங்கு நோயாளிகளின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே குறுகிய கால தீர்வு, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அழிப்பதே ஆகும்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமது சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருப்பதுதான். இதைவிட அதிகமான நோயாளிகள் பதிவாகத் தொடங்கினால், நமது வைத்தியசாலைகளால் அதைச் சமாளிக்க முடியாது. 

இது போன்ற ஒரு பிரச்சினை தொடர்ந்தால் இதுதான் நடக்கும். அப்படி நடந்தால், நோயாளி பராமரிப்பு சீர்குலைந்துவிடும். இதை இன்னும் கட்டுப்படுத்த முடியும்." என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4