"தித்வா" புயல் பாதிப்பு: வடக்கு மீனவர்களுக்கு 10 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான உபகரணங்கள் விநியோகம்!

#SriLanka #Fisherman #Lanka4 #North #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Abi
14 hours ago
"தித்வா" புயல் பாதிப்பு: வடக்கு மீனவர்களுக்கு 10 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான உபகரணங்கள் விநியோகம்!

கடந்த ஆண்டில் வீசிய "தித்வா" சூறாவளியினால் வாழ்வாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கான படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் நன்கொடையாக வழங்கும் விசேட நிகழ்வு காரைநகரில் உள்ள 'சீ நோர்' (C-Nor) படகுத் தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது.

மீன்பிடி, நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இந்த வாழ்வாதார உதவி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

"தித்வா" புயலால் படகுகள் மற்றும் உபகரணங்களை இழந்து தவித்த மீனவர்களின் பொருளாதாரத்தை மீட்கும் நோக்கில், முதற்கட்டமாக இந்த நிதியுதவிகள் மற்றும் உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

1.8 மில்லியன் ரூபாய் மொத்தப் பெறுமதியான 32 மீன்பிடி வலைகள் மீனவர்களிடம் கையளிக்கப்பட்டன. 8.64 மில்லியன் ரூபாய் மொத்தப் பெறுமதியான 18 மீன்பிடிப் படகுகள் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

"தித்வா" சூறாவளியினால் வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்ட பாதிப்புகளுக்குத் தீர்வாக, அவர்களின் மீன்பிடித் தொழிலை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரும் நோக்குடனேயே இந்த மீன்பிடி உபகரணங்கள் அவசரமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4