தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்துரையாடல்!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்களை நேற்று (19) வெள்ளிக்கிழமை மாலை சென்னை தலைமைச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இலங்கையிலுள்ள சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து, விரைவில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களைச் சந்திப்பதற்காகத் தமிழகத்திற்கு வருகை தரவுள்ளமை குறித்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இதன்போது எடுத்துரைத்தார்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே. நவாஸ் கனி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் துணைச் செயலாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம், அதன் தென்காசி மாவட்டச் செயலாளர் சையது பட்டாணி, எம்.எஸ்.எப். மாநிலச் செயலாளர் ஷபீக் அஹமது மற்றும் "மணிச்சுடர்" நாளிதழின் சிரேஷ்ட ஊடகவியலாளர் திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் உடனிருந்தனர்..
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே