சுகாதார சீர்கேடு: மன்னாரில் பனை பொருள் உற்பத்தி நிலையம் அதிகாரிகளால் முற்றுகை!

#SriLanka #Mannar #Health #Lanka4 #Plant #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
சுகாதார சீர்கேடு: மன்னாரில் பனை பொருள் உற்பத்தி நிலையம் அதிகாரிகளால் முற்றுகை!

மன்னார் தரவன் கோட்டை பகுதியில் இயங்கி வந்த பனை பொருள் உற்பத்தி நிலையம் ஒன்றில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக பொது சுகாதார பரிசோதகர்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த நிலையத்தில் பனங்கள்ளு பயன்படுத்தி சில பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், குறித்த பொருட்கள் தயாரிப்பில் பல்வேறு சுகாதார சீர் கேடுகள் காணப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிக்குச் சென்ற மன்னார் நகர சபை மற்றும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் சுகாதார பரிசோதகர்கள் குறித்த பகுதியில் சோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன் போது குறித்த பகுதியில் உற்பத்தி பொருட்கள் தயாரிக்கப்படும் போது பல்வேறு சுகாதார குறைபாடுகள் கண்டு பிடிக்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4