இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர்

#SriLanka #Meeting #America #President #AnuraKumaraDissanayake #Secretary
Prasu
3 hours ago
இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர்

இலங்கைக்கு அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் கலாநிதி பால் கபூர் அவர்களை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் சந்தித்துள்ளார்.

இலங்கையின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில், தனி நாடாக மிக அதிகமான பங்கினை அமெரிக்கா கொண்டுள்ளதோடு, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இந்த வர்த்தக ஒத்துழைப்பை இருதரப்பிற்கும் பயனளிக்கும் வகையில் மேலும் அபிவிருத்தி செய்வது குறித்தும், அதற்காக அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பணிகளை மிக விரைவாக நிறைவு செய்வது குறித்தும் இந்த சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

இந்நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலையானது நிலையான அமைதியை நோக்கி நகரும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை பின்பற்றிய மனிதாபிமானக் கொள்கையை நினைவுகூர்ந்ததுடன், பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இலங்கை தனது அதிகபட்ச ஆதரவை வழங்கத் தயாராக உள்ளது என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4