நடைப்பயிற்சியின் போது துயரம்: கிளிநொச்சியில் விபத்தில் சிக்கிய முன்னாள் அதிபர் மரணம்!

#SriLanka #Accident #Kilinochchi #Lanka4 #Principal #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
நடைப்பயிற்சியின் போது துயரம்: கிளிநொச்சியில் விபத்தில் சிக்கிய முன்னாள் அதிபர் மரணம்!

கிளிநொச்சியில் பெரும் துயரம் கிளிநொச்சி. ஏ - 9 பிரதான வீதி யில் பொலிஸ் நிலையத்துக்கு முன் பாக நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில், ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் பெருமாள் கணேசன் என்பவர் பரிதா பகரமாக உயிரிழந்துள்ளார்.

விபத்துக்குள்ளான அதிபர் வழமை போன்று தனது மாலை நேர நடைப் பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத் துக்கு முகங்கொடுத்துள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் நிலை யத்துக்கு முன்பாக அமைந்துள்ள மஞ்சள் கோட்டு பாதசாரி கடவையில் அவர் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில், அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மிகக் கொடூரமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்த அவர், உடனடியாக மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். 

எனினும், அங்கு அவருக்கு வழங் கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்துள்ளார். ஓய்வுபெற்ற அதிபர் பெருமாள் கணேசனின் திடீர் மறைவு, கிளி நொச்சி மாவட்ட கல்விச் சமூகம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியை யும் ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டப் பாட சாலைகளில் அதிபராகவும், ஆசிரிய ராகவும் பணியாற்றி ஆயிரக்கணக் கான மாணவர்களைச் சிறந்த நிலைக்கு உயர்த்திய பெருமைக்குரிய வர் பெருமாள் கணேசன் ஆவார். 

ஓய்வுபெற்ற பின்னரும் சமூக மற்றும் கல்வி மேம்பாட்டுப் பணிகளில் அவர் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4