கனடாவின் மான்ட்ரியல் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம்
#Death
#Police
#Canada
#people
#Lanka4
#GunShoot
#L4
Prasu
4 hours ago
கனடாவின் மான்ட்ரியல் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு குடிமகன் மற்றும் தாக்குதல் நடத்தியவர் ஆகியோர் அடங்குவர்.
சந்தேக நபர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என மாண்ட்ரீல் காவல்துறைத் தலைவர் ஃபாடி டகர் தெரிவித்தார்.
மான்ட்ரியலின் அதிக மக்கள்தொகை கொண்ட பகுதியான கோட்-டெஸ்-நெய்ஜஸில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் நீண்ட தூரம் சுடும் துப்பாக்கியைப் பயன்படுத்தியதாக காவல்துறை நம்புகிறது. அதோடு 29 தடவைகள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே