பாராளுமன்றத்தில் பதற்றம் - சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

#SriLanka #Parliament #Lanka4 #Fight #Politician #L4
Prasu
2 hours ago
பாராளுமன்றத்தில் பதற்றம் - சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் எழுந்து நின்று, சபாநாயகரிடம் அவசர பாராளுமன்ற விவாதம் ஒன்றைக் கோரினர். 

அதற்கமைய, சபாநாயகர் இது குறித்து ஆளுந்தரப்பிடம் கேள்வி எழுப்பிய போது, அதற்கு இணங்க முடியாது எனவும் தேவையெனில் குறித்த விடயம் தொடர்பாக வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு இணங்குவதாகவும் சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். 

அதனை தொடர்ந்து அமைதியின்மை ஏற்பட்டதால் சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4