இந்தியாவில் மீண்டும் வழமைக்கு திரும்பிய டெலிகிராம் செயலி

#India #exam #Lanka4 #Telegram #Banned #L4
Prasu
2 hours ago
இந்தியாவில் மீண்டும் வழமைக்கு திரும்பிய டெலிகிராம் செயலி

இந்தியாவில் மே 3ம் திகதி நடைபெற்ற மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது. பின்னர் மறுதேர்வு கடந்த ஜூன் 21 அன்று நடைபெற்றது.

முந்தைய தேர்வில் வினாத்தாள் டெலிகிராம் மூலம் பரவியது கண்டறியப்பட்டதால் மறுதேர்வு முடியும் வரை டெலிகிராம் செயலி முடக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் டெலிகிராம் செயலி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. புதிய தரவிறக்கத்திற்காக கூகுள் பிளே ஸ்டோரிலும் மீண்டும் கிடைக்கிறது.

முன்னதாக இந்த நடவடிக்கையை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4