கோட்பாபயவின் கைது நடவடிக்கையை தடுக்கக்கோரும் மனு பரிசீலனைக்கு!!

#SriLanka #Case #Court #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
5 hours ago
கோட்பாபயவின் கைது நடவடிக்கையை தடுக்கக்கோரும் மனு பரிசீலனைக்கு!!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளின் ஒரு பகுதியாக தனது கைது நடவடிக்கையை தடுக்குமாரு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த இந்த ரிட் மனு, மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், நீதிபதி ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி சரத் திசாநாயக்க ஆகியோரைக் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அமர்வு முன்பு, ஜூன் 18 அன்று பரிசீலிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர் கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் ரொமேஷ் டி சில்வா, நீதித்துறையின் சுதந்திரமும் தனிநபர் சுதந்திரமும் நமது அரசியலமைப்பில் உரிமைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார். 

 இந்த சுதந்திரம் மிகக் குறைவான நேர்வுகளில் மட்டுமே கட்டுப்படுத்தப்படலாம் என்றும், ஈஸ்டர் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது என்பது எந்தவொரு நியாயமான அடிப்படையுமின்றி தனிநபர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பது ஆகாது என்றும் ஜனாதிபதி சட்ட ஆலோசகர் சுட்டிக்காட்டினார். 

 குறைவான நேர்வுகளில் மட்டுமே தனிநபர்களைக் கைது செய்யவும் விளக்கமறியலில் வைக்கவும் சட்டம் அனுமதிக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்ட ஆலோசகர், ஒருவரை விளக்கமறியலில் வைப்பது ஒரு தண்டனையாக இருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.

 தமது கட்சிக்காரர் எந்தவொரு விசாரணைக்கும் அழைக்கப்படவில்லை என்று கூறிய ஜனாதிபதி சட்ட ஆலோசகர், சம்பந்தப்பட்ட விசாரணையில் அவர் எந்தவொரு சாட்சியையும் செல்வாக்கு செலுத்தவில்லை என்றும் குறிப்பிட்டார். 

 எதிர்மனுதாரர்கள் எந்தவொரு நியாயமான அடிப்படையுமின்றி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திலிருந்து தமது கட்சிக்காரருக்கு எதிராக பயணத் தடை பெற்றுள்ளனர் என்றும், எந்தவொரு அடிப்படையுமின்றி அவரது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

 தமது கட்சிக்காரர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால், அவர் பிணை கோரும் சுதந்திரத்தை இழப்பார் என்றும், அதனால்தான் மனுதாரர் இந்த நீதிமன்றத்தின் முன் வந்துள்ளார் என்றும் ஜனாதிபதி சட்ட ஆலோசகர் கூறினார். 

 உண்மைகளை முன்வைத்த பின்னர், மனுக்கள் மீதான பரிசீலனையை நீதிமன்றம்  ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4