இராணுவத்தை பாதுகாப்பதாக கூறினாலும் அரசாங்கம் எதுவும் செய்யவில்லை - சஜித் குற்றச்சாட்டு!
இராணுவத்தைப் பாதுகாத்து தேசிய பாதுகாப்புக்காக முன்நிற்பதாக ஜனாதிபதி கூறினாலும், முன்னாள் இராணுவத் தலைவர்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், இன்று சரத் பொன்சேகாவுக்கு அமெரிக்கா செல்ல முடியாது. சவேந்திர சில்வாவுக்கு சில நாடுகளுக்குச் செல்ல முடியாது.
இதற்கு எதிராக அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதேநேரம்எக்னலிகொட, லசந்த மற்றும் தாஜுதீன் ஆகியோரைக் கொலை செய்தவர்கள் நிச்சயமாகக் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
ஊடக நிறுவனங்களை தீ வைத்தவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களைத் தாக்கியவர்கள் நிச்சயமாகக் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே